சேலத்தில் மது பதுக்கி விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது

சேலத்தில் மது பதுக்கி விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது

கைது

சேலத்தில் மது பதுக்கி விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது. போலீசார் விசாரணை.
சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரீஸ்வரன் தலைமையில் போலீசார் எருமாபாளையம் அருகே உள்ள ஆலமரத்துகாடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 67) என்பதும், அவர் தனது வீட்டில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து மூதாட்டியை கைது செய்து அவரிடம் இருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்னதிருப்பதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி போது அதே பகுதியை சேர்ந்த அமராவதி (52) என்றும் அவர் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அமராவதியை கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story