பல்லடம் அருகே கள்ளச் சந்தையில் ஆயில் விற்ற டிரைவர் உள்பட 2பேர் கைது

பல்லடம் அருகே கள்ளச் சந்தையில் ஆயில் விற்ற டிரைவர் உள்பட 2பேர் கைது

காவல் நிலையம்

பல்லடம் அருகே கள்ளச் சந்தையில் பர்னஸ் ஆயில் விற்ற டிரைவர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்லடம் அருகே கள்ளச் சந்தையில பர்னஸ் ஆயில் விற்ற டிரைவர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்..12 ஆயிரம் லிட்டர் ஆயிலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையருகே டீசல் மற்றும் பெட்ரோலுடன் கலப்படம் செய்ய பயன்படும் பர்னஸ் ஆயிலை திருடி விற்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் துளசிமணி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த ரோட்டில் நிறுத்தியிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்து விலைப்பட்டியளை ஆய்வு செய்து டிரைவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அதில் 600 லிட்டர் பர்னஸ் ஆயிலை கள்ளச் சந்தையில் விற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த டிரைவர் குணசீலன் வயது (50) பர்னஸ் ஆயிலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வாழதண்டாயுதபாணி (65) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 11,401 லிட்டர் பர்னஸ் ஆயிலுடன் கூடிய டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 600 லிட்டர் பர்னஸ் ஆயிலையும் பறிமுதல் செய்தனர்.....

Tags

Next Story