வீடுகளில் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய 2பேர் கைது
கோப்பு படம்
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை நந்தகோபால் புரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் காந்தி (45). இவருக்கு சொந்தமான கூட்டாம்புளியில் உள்ள பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கிருந்த பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர். இ
துபோல் கதிர்வேல் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அனில்குமார் (53) என்பவருக்கு சொந்தமான சாயர்புரம் ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. மேலும் சேர்வைக்காரன் மடம் பகுதியில் உள்ள ராமஜெயம் மகன் தீபக் (37), என்பவரது வீட்டில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. இது தொடர்பாக புதுக்கோட்டை மற்றும் சாயர்புரம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார்கள் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஏரல் சம்படி காலனியைச் சேர்ந்த மாயாண்டி மகன் சந்தன மகராஜன் (24), தளவாய்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துராமன் (எ) ரகு (36) ஆகிய 2பேரையும் கைது செய்து பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.