கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

2 பேர் கைது 

கத்தியை காட்டி ₹ 900 பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 46), சம்பவத்தன்று இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகு தியை சேர்ந்த கார்த்திபன் (20), செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (19) ஆகியோர் காஜா மொய்தீனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் தர மறுத் துள்ளார். உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.900-ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திபன், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story