பளுகல் அருகே மது விற்ற 2 பேர் கைது.

பளுகல் அருகே மது விற்ற 2 பேர் கைது.
கைதான விமல், மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பனை பல இடங்களில் நடந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனை அதிகமாக நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விமல் மற்றும் குன்னத்துக்கால் பகுதியை சேர்ந்த மனு என்பதும் தெரிய வந்தது. அவர்கள் அந்த இடத்தில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்கள் மற்றும் 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story