வெள்ளகோவிலில் மது விற்ற  2 பேர்  கைது !

வெள்ளகோவிலில் மது விற்ற  2 பேர்  கைது !

கைது

வெள்ளகோவில் பகுதிகளில் மது விற்ற இரண்டு நபர்களை சிலுவையில் காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில் பகுதியில் மது பாட்டில்களைபதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வெள்ளகோவில் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் - காங்கயம் சாலை டாஸ்மாக் கடைஅருகில் மது விற்றுக் கொண்டிருந்த கோவை கணபதி எம்.கே.பி. நகரை சேர்ந்த இளையராஜா (வயது 36) என்வரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் முத்தூர்காங்கயம்சாலை டாஸ்மாக் கடை அருகில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாதவராஜபுரத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story