போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

போலி ஆவணங்களுடன் இருந்தவர் கைது

தலைமறைவாக் உள்ள மூவரை தேடி வருகின்றனர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில், இலங்கையைச் சோ்ந்த நபா்களுக்கு போலி ஆவணங்களைக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு எடுத்துத்தரும் கும்பல் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று கடந்த நவம்பர் 28-இல் ஆய்வு மேற்கொண்டனா். இதில், அங்கு தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சோ்ந்த சாதுசன் (24) என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அந்நாட்டு கடவுச்சீட்டில் தமிழகம் வந்ததும், பின்னா் போலியான ஆவணங்கள் மூலம் திருச்சியில் புதிதாகப் பெறப்பட்ட இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டு திருச்சியிலிருந்து ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து சாதுசன் மற்றும் அவருக்கு உதவிய சென்னையைச் சோ்ந்த முகவா் ஜோயல்புகழேந்தி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து முறைகேடாகப் பெறப்பட்ட கடவுச்சீட்டுகளும், போலி ஆவணங்கள் மற்றும் முத்திரை உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். கியூ பிரிவு போலீஸாரும் விடுதலைப்புலிகளுடனான தொடா்பு குறித்து தனியே விசாரணை நடத்தினா். இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த சாமி என்கிற வைத்தியநாதன் (51), காரைக்குடியைச் சோ்ந்த சேவியா் (47) ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இதேமுறையில் மேலும் சுகந்தினி, நதுசன், சதிஷ் ஆகிய மூன்று பேரும் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றது உறுதியானது. இதைத்தொடா்ந்து, வைத்தியநாதன், சேவியா் ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா்.

Tags

Next Story