எடப்பாடி அருகே நிலபிரச்சனையில் 2 பேருக்கு கத்திகுத்து: ஒருவர் பலி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கலர் பட்டி பகுதியைச் தவசியப்பன் மகன் செல்வராஜ் (49) (எடப்பாடி தாலுக்கா தினமலர் நிருபர்)இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன்,முருகன்(43) இருவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சனையை இருந்து வந்துள்ளது.

இந்த நிலை இன்று காலை செல்வராஜ் மற்றும் ராமகவுண்டனூரை சேர்ந்த ஆணைக்கவுண்டர் மகன் கந்தசாமி (69) இருவரும் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் கலர்பட்டியில் இருந்து எடப்பாடி செல்வதற்காக கிளம்பியுள்ளனர். அப்போது வாழக்காயன் தோப்பு என்ற இடத்தில் சென்றுகொண்டிருக்கும்போது முருகன் மற்றும் அவரது மகன் கிஷோர்குமார்(16) இருவரும் டாட்டா சுமோ வாகனத்தில் வந்து செல்வராஜ் வாகனத்தின் மீது பின்புறமாக மோதியுள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி செல்வராஜ் கீழே விழ பின்பக்கம் அமர்ந்து வந்த கந்தசாமி தலையில் அடிபட்டு கிடந்துள்ளார். அப்போது முருகன் மற்றும் அவரது மகன் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கொடுவாள் எடுத்து வந்து செல்வராஜை தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டியதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த செல்வராஜை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார் இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story