சிவகிரி அருகே மான் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

சிவகிரி அருகே மான் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
மான் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்
சிவகிரி அருகே மான் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பகுதியில் காவல்துறையினா் ரோந்து சென்றபொழுது, காந்தாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று மான் கொம்புகள் இருந்தது தெரியவந்ததாம். இது குறித்து சிவகிரி வனத்துறையினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்து. காா் மற்றும் மான் கொம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து சிவகிரி வனச்சரகா் மௌனிகா தலைமையில், சிவகிரி வடக்குப் பிரிவு வனவா் அசோக்குமாா் மற்றும் வனப் பணியாளா்கள் விசாரணை மேற்கொண்டனா். பிடிபட்ட வாசுதேவநல்லூா் பெத்திராஜ் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கிருஷ்ணகுமாா் (24), வாசுதேவநல்லூா் களஞ்சியம் தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் தியாகு (24) ஆகிய 2 பேரும் ஜனவரி 1 ஆம் தேதி உள்ளாா் கிராமத்திற்கு மேற்கே உள்ள காப்புக் காடு பகுதியில் புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட வனஅலுவலா் முருகன் உத்தரவின் பேரில் 2 பேருக்கும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story