அரகண்டநல்லூரில் ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 தனியார் பஸ்கள் பறிமுதல்

அரகண்டநல்லூரில் ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
அரகண்டநல்லூரில் ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 தனியார் பஸ்கள் பறிமுதல்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒரே பதிவு எண்ணில் 2 பஸ்கள் ஓடுவதாக மாவட்ட கலெக்டர் பழனிக்கு புகார் சென்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து துறைக்கு அவர் உத்தரவிட்டார். இதே போன்ற புகார் மனு விழுப் புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வந்தது.இதையடுத்து, விழுப்புரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான அலுவலர்கள் அரகண்டநல்லூர் பகுதிக்கு வந்து, ஆய்வு மேற்கொண்டனர், அப்போது TN 32 AC 7755 என்கிற ஒரே பதிவு எண்ணில் 2 தனியார் பஸ்கள் அந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 2 தனியார் பஸ்களின் ஆவணத்தை சரி பார்த்த போது, ஒரு பஸ்சில் போலியான பதிவு இருந்தது கண்டுப் பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பஸ்சை பறிமுதல் செய்து, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர், மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர் மீது அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்து இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story