+2 பொது தேர்வு - ஆட்சியர் ஆய்வு

+2 பொது தேர்வு - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

நாகப்பட்டினம் மாவட்டம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொது தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மேல்நிலை முதலாம். இரண்டாம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் துவங்கி 25.03.2024 முடிய நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் மேல்நிலை முதலாம் ஆண்டு 3176 மாணவர்களும், 3627 மாணவிகளும் என மொத்தம் 6803, மேல்நிலை இரண்டாம் ஆண்டு 3135 மாணவர்களும், 3936 மாணவிகளும் என மொத்தம் 7071 பள்ளி தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 71 பள்ளிகளிலிருந்து 33 மையங்களிலும், தேர்வு எழுதி வருகின்றனர். மேலும் வினாத்தாள் எடுத்துசெல்வதற்கும் விடைத்தாள்களை திரும்ப எடுத்து வருவதற்கும் நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 10 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி. காற்றோட்டம் வெளிச்சம், கழிவறை வசதி. தடையில்லா மின்சாரம். போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம். இரண்டாம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 36, துறை அலுவலர்கள் 36. வழித்து அலுவலர்கள் 10, அறை கண்காணிப்பாளர்கள் 456, நிலையான பறக்கும்படை 72 பறக்கும்படை 16, அலுவலக பணிகள் 90 ஆக மொத்தம் 716 நபர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் ஆண்டுக்கான டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர் /வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் 61 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் மற்றும் கூடுதல் நேர சலுகை வழங்கப் பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தஆய்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.கா.சே.சுபாஷினி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story