கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சகோதரிகள் 2 பேர்  பலி

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சகோதரிகள் 2 பேர்  பலி
குமரி தெப்பகுளத்தில் மூழ்கி இறந்த சிறுமிகள்
கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் பகுதியில் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் கட்டிட தொழிலாளி. அவரது மனைவி கிறிஸ்டா. இந்த தம்பதிக்கு பிரியா (14) மற்றும் ஷிவாலி (12) என்ற 2 மகள்கள் உண்டு. பிரியா 9ம் வகுப்பும், ஷிவாலி 7ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் பிரியா தனது தங்கை ஷிவாலியுடன் மகாதான புரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, 2 பேரும் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு கைக்கழுவுவதற்காக கோயில் அருகே உள்ள தெப்ப குளத்துக்கு 2 பேரும் சென்றனர்.

கைக்கழுவிக்கொண்டிருந்தபோது படிகளில் இருந்த பாசியால் கால் தவறி 2 பேரும் குளத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கும். தீயணைப்பு நிலையத்துக் கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தெப்பகுளத்தில் இறங்கி பிணமாக மிதந்த ஒரு சிறுமிகளை மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமிகள் இருவரும் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? அங்கு என்ன நடந்தது? என பல் வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சாமி கும்பிட வந்த இடத்தில் தெப்ப குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story