கல்லூரி பஸ் மோதி 2 மாணவர்கள் படுகாயம் !

கல்லூரி பஸ் மோதி 2 மாணவர்கள் படுகாயம் !
X
விபத்து
கல்லூரி பஸ் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் குமாரகோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதினம் காலை கல்லூரிக்கு பைக்கில் சென்றார். இரணியல் - தக்கலை சாலையில் சென்ற போது கீழ மணியன்குழியில் வைத்து அவருடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர் நிதின் என்பவரை கண்டவுடன் பைக்கை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற கல்லூரி பஸ் எதிர்பாராத விதமாக மாணவர்கள் இரண்டு பேர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிட்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். இது குறித்து அபிஷேக் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய பறைக்கோடு பகுதி பிரேம்குமார் (68) மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story