குமரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டாரஸ் லாரிகள் மோதல்

குமரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டாரஸ் லாரிகள் மோதல்
விபத்து 
குமரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டாரஸ் லாரிகள் மோதல். 4 பேர்  படுகாயம்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருநெல்வேலி வள்ளியூரில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு இரண்டு டாரஸ் லாரிகள் இன்று காலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தன. சுங்கான்கடையை அடுத்த வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ஒரு லாரிக்கு முன்பக்கமும் மற்றொரு லாரிக்கு பின் பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்டது. லாரி டிரைவர்கள் கிளினர்கள் என நான்கு பேரும் படுகாயமடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடுரோட்டில் லாரிகள் நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.

Tags

Next Story