2 டன் மீன்கள் செத்து மிதப்பு

சூளகிரி அருகே வளர்ப்பிற்காக விடப்பட்ட 5 டன் மீன்களில் 2 டன் மீன்கள் செத்து மிதப்பதால் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

சூளகிரி அருகே வளர்ப்பிற்காக விடப்பட்ட 5 டன் மீன்களில் 2 டன் மீன்கள் செத்து மிதப்பதால் கிராமத்தினர் அதிர்ச்சி* கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு அதிகப்படியான ரசாயன கழிவுகள் கலந்த நீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் மதகுகள் சீரமைக்கப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர் முழுமையாக திறந்துவிடப்படுவதால் பாசனத்திற்காகவும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இடதுபுற பிரதான கால்வாய் மூலம் திறக்கப்பட்ட நீரால் சூளகிரியை அடுத்த நல்லகானகொத்தப்பள்ளி என்னும் கிராமத்தின் ஏரி முழுமையாக நிரம்பி இருந்தது.. ஏரியினை மீன் வளர்க்க ஏலம் எடுத்துள்ள ராமசாமி என்பவர் சுமார 5 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்ப்பிற்காக விடப்பட்டு ஒரு சில தினங்களுக்குள்ளாகவே 2 டன் மீன் குஞ்சுகள் செத்து மிதக்கும் சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.. தென்பெண்ணை ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன கழிவுநீர் கலப்பே மீன்கள் உயிரிழப்பிற்கான காரணமாக கூறப்படுகிறது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story