2 டூ வீலர்கள் மோதி விபத்து.

டூ வீலரில் சென்றவர் மீது மற்றொரு டூவீலர் மோதி விபத்து
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு, மொச்சகொட்ட பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 50. இவர், டிசம்பர் 11ஆம் தேதி காலை 10-மணி அளவில், கரூர்- கோவை சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் க.பரமத்தி, ஜெயராம் ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த, மற்றொரு அடையாளம் தெரியாத டூவீலர், பாலசுப்பிரமணியன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், வாகனத்துடன் கீழே விழுந்ததில் பாலசுப்ரமணியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாலசுப்பிரமணியத்தின் மருமகன் முருகேசன் வயது 32 என்பவர், இதுகுறித்து க. பரமத்தி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் யார்? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story