சாலையில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளால் பரபரப்பு

சாலையில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளால் பரபரப்பு

யானை

சாலையில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளை பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதிகளில் சுற்றித்திரிகிறது. இந்த காட்டு யானை கூட்டத்தில் பிரிந்த 2 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டு அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, அவரை, துவரை உள்ளிட்ட விளை பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த 2 காட்டு யானைகளும் இன்று தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலிவாரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்றது. ஒய்யாரமாக நடந்து சென்ற இந்த காட்டு யானைகளை பார்த்து கடைகளில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறியடித்தபடி ஓடினர்.

அதனைத்தொடர்ந்து 2 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து மரக்கட்டா காப்பு காட்டுக்குள் நுழைந்து சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. காட்டு யானைகள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Next Story