லஞ்சவழக்கில் துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

லஞ்சவழக்கில் துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

லஞ்ச வழக்கில் சிறை 

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் களஞ்சேரியை சேர்ந்த சாம்பவைத்தியநாதன் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு தனது தாயாரின் பெயரில் வாங்கிய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துதரக்கோரி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். அப்போது மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிந்த சிவசங்கரன் (63) பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சாம்பவைத்தியநாதன் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், மண்டல துணை வட்டாட்சியர் சிவசங்கரன் லஞ்சம் வாங்கியபோது கடந்த 2008 ம் ஆண்டு பிப்.26ம் தேதி கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று சிவசங்கரனுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story