போக்சோ வழக்கு - குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு சிறை

போக்சோ வழக்கு - குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு சிறை 

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2016 -ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்ட சிறுவர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 30ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான 16 வயது சிறுவனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுப்புலெட்சுமி தீர்பளித்தார். போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story