20 ஆண்டுகள் கழித்து சந்தித்து

X
நாகை இஜிஎஸ் பிள்ளை தனியார் கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்த 2002- 2005-ம் ஆண்டு மாணவர்கள், 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள்,காவல்துறை அதிகாரிகள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அமெரிக்கா, லண்டன், டெல்லி, மும்பை, சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை என பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் பணியாற்றி வரும் முன்னாள் கல்லூரி மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். தங்களுக்கு பாடம் கற்பித்த கல்லூரி பேராசிரியர்களை அழைத்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து கலந்துரையாடினர். அப்போது, தங்கள் குடும்பத்தை பற்றியும். தங்கள் பணிகளை பற்றியும் உரையாடினர். நிகழ்ச்சியில், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. மேலும் குழு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மேலும், பேராசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும், பரிசு வழங்கியும் கௌரவித்தனர்.
Next Story

