20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா

20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா
X
20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரி நகரில் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் 20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார். காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய் செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,அங்கன்வாடி அதிகாரி,ஊராட்சி மன்ற தலைவர்,துணைத்தலைவர்,ஒன்றிய கவுன்சிலர்,அங்கன்வாடி ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Next Story