20 ஆண்டு கால கோரிக்கைக்கு அமைச்சர் பரிந்துரை
Komarapalayam King 24x7 |8 Dec 2025 9:34 PM ISTகுமாரபாளையம் அருகே அருந்ததியர் மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் முதல்வருக்கு பரிந்துரை
குப்பாண்டபாளையம் ஊராட்சி குள்ளநாயக்கன்பாளையம் அருந்ததியர் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வரும் பகுதியில் இதுவரை அவர்கள் இருக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டாக்கள் இல்லாத நிலையில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வேண்டி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து அவர்களிடம் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த வாரம் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இன்று ஒன்றிய கழக அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்துவை அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கை மனு வழங்கினர். இதனையடுத்து உடனடியாக நாமக்கல் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி EX MLA. அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடைய வழிகாட்டுதலோடு மாண்புமிகு தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களை ஒன்றிய பொறுப்பாளர் அவர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் சந்தித்து அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துரைத்து அவரிடம் கோரிக்கை மனு வழங்கினார். கோரிக்கை மனுவை பெற்ற அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வீட்டுமனை பட்டாக்கள் பெற்று தருவதாக உறுதி அளித்தார். உறுதியளித்த ஒரு மணி நேரத்தில் தாங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டது என்றும் மிக விரைவில் நிச்சயம் அப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என உறுதியாக உறுதியளித்தார் கோரிக்கை மனு வழங்கப்பட்ட உடனே அக்கோரிக்கையை ஏற்று பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்த ஒன்றிய பொறுப்பாளர் அவர்களுக்கு இதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நன்றியை கூறிக்கொண்டு மகிழ்ந்தனர் தங்களின் இருபதாண்டு கால கோரிக்கையை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்த ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி கூறினர்.
Next Story


