புதுகை மாவட்டத்தில் 20 வழக்குகள் பதிவு

புதுகை மாவட்டத்தில் 20 வழக்குகள் பதிவு

மாவட்ட ஆட்சியர் 

புதுகை மாவட்டத்தில் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்தார்.. இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத்தடுப்பதற்காக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.இதன் அடிப்படையில் அறந்தாங்கியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது, அனுமதியின்றி கூட்டம்நடத்தியது,

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரத்தில் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அதிமுக நகரச் செயலர் ஆதிமோகன குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல, தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக குடுமியான்மன விளானூர், பொன்பேத்தி,வெவ்வேல்பட்டி, திருக்கட்டளை, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது குறித்து அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வேங்கைவயலில் அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்,

ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 தேர்தல் விதிஉள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், உரிய ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு சென்றதாக வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story