தர்மபுரி மாவட்டத்தில் 20 செ.மீ மழை பதிவு
தற்போது தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கி உள்ளது பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் வெயில் 100 டிகிரி தாண்டி வெப்பம் நிலவி வருவதை அடுத்து பொதுமக்கள் முப்பத்தால் தவித்து வருகின்றனர் மேலும் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பொழிந்துள்ளது
. அதன்படி மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம். தர்மபுரியில் 40 மில்லிமீட்டர்,பாலக்கோட்டில் 9 மில்லி மீட்டர்,மாரண்டஅள்ளியில் 11 மில்லிமீட்டர், பென்னாகரம் 59 மில்லிமீட்டர், ஒகேனக்கல் 35 மில்லிமீட்டர், அரூர் 31.2 மில்லிமீட்டர், பாப்பிரெட்டிப் பட்டியில் 11 மில்லிமீட்டர், மொரப்பூர் 7 மில்லிமீட்டர் என தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு - 203.2 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு - 22.57 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.