அம்மூரில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 பேர் கைது
அம்மூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்திய 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 8 வட மாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்மூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்டில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 20 கிலோ எடையிலான கஞ்சாவை கடத்தி வந்த 8 வட மாநில வாலிபர்கள் ராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவு கலால் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் ரயில்வே நிலையத்தில் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் ரயில்வே நிலையத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்தபோது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்ராம் (40), ஆகாஷ்குமார் (25), ரவீந்திரகுமார் (32), தியோசரண்குமார் (35), நவீன்குமார் (34), திலீப் குமார் பூஜ்யன் (27), விஜயராம் (50) மற்றும் பீகாரை சேர்ந்த முதல் குற்றவாளியான சந்தோஷ் பிரசாத் குஷ்வாகா (31) ஆகிய 8 வட மாநிலத்தவர்கள் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்தில் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வருகை தந்து மீண்டும் சென்னைக்கு ரயில் மூலம் 8 பேரும் பயணம் செய்தனர்.
அப்போது ரயில் முழுவதும் ரயில்வே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது வாலாஜா ரோடு அம்மூர் ரயில்வே நிலையத்தில் 8 பேரும் இறங்கி உள்ளனர் அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு முரணான பதிலை அளித்ததோடு அவர்கள் கொண்டு வந்த பார்சலை வாங்கி பரிசோதனை செய்வதில் அதில் சுமார் 20 கிலோ எடையிலான கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலால் போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று 8 பேரும் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்... அம்மூர் ரயில்வே நிலையத்தில் ஜார்கண்டில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 20 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த சம்பவம் ரயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..