கவர்னருக்கு கருப்புக் கொடி காற்ற முயன்ற 20 பேர் கைது

கவர்னருக்கு கருப்புக் கொடி காற்ற முயன்ற 20 பேர் கைது

ராமநாதபுரத்தில் தமிழ் எதிராக உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

ராமநாதபுரத்தில் தமிழ் எதிராக உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் தமிழக ஆளுநர் ரவி ஒரு நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவுக்கு அகத்திக்கீரை கொடுத்து குடும்பத்துடன் வழிபட்டார்.

அதன் பின்பு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திற்கு தரிசனத்திற்கு சென்றார் இந்நிலையில் ராமநாதபுரம் தமிழ் உணர்வாளர்கள்கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் பகுதியில் ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தமிழக மக்களுக்கு எதிராகவும் தமிழக மக்களின் நலத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காமல் செயல்படும் தமிழக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கண்டன கோஷங்கள் முழங்கினர். இதனால் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஒரு நாள் பயணத்தை நிறைவு செய்து தமிழக ஆளுநர் மதுரை நோக்கி சென்றார்.

Tags

Next Story