20 ஆண்டு சிறை தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம் !
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி செல்வி ஜெயந்தி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஏம்பல் கிராமம் அருகே த தாணிக்காடு கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியன் என்பவரின் மகன் பிரதீப் வயது 19 இவர் கடந்த 25.10.22 மாலை 5 மணி அளவில் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தொடர்ந்து ஒரு மாத காலம் இது போன்ற பாலியல் வன்கொடுமையை செய்ததால் சிறுமி 28.11.22 அன்று தனது தாயிடம் கூறியதை யடுத்து அன்று மாலை 5 மணிக்கு சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் பேரில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பிரதிபை அன்று இரவே அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் மகிலா நீதிமன்ற நீதிபதி செல்வி ஜெயந்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பிரதிப் குற்றவாளி என அறிவித்தார். மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாக 20 ஆண்டுகால கடுங்காவல் சிலை தண்டனையும் 25000 ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி செல்வி ஜெயந்தி இதை எடுத்து பிரதிப்பை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
Next Story