200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியை உள்ளிட்ட மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் .
திருவாரூர் தனியார் அரங்கில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் தலைமையில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் விழா நடைபெற்றது. இதில் திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சி, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் . இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முரளி,ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story