200 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு- ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
Sivagangai King 24x7 |31 Dec 2024 4:25 AM GMT
தேவகோட்டை அருகே கண்மாய் கலுங்கை அடைத்ததால் 200 ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே முப்பையூர் பொதுப்பணித் துறை கண்மாய் நிரம்பிய நிலையில் உபரிநீர் வெளியேறாமல் இருக்க அக்கண்மாய் கலுங்கை சிலர் அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெட்டிவயல், வாயுலானேந்தல் கிராமங்களில் 200 ஏக்கருக்கு மேல் விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழுகி வருகின்றன. மேலும் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய அறுவடை இயந் திரங்கள் செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட 2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜா தலைமையில் நேற்று(டிச.30) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர். இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ராஜா கூறியதாவது உபரிநீரை வெளியேற்றுவதற்குத்தான் கலுங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உபரிநீரை வெளியேற விடாமல் கலுங்கை மண்ணை கொண்டு அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே தேவகோட்டை சார்-ஆட்சியரிடம் மனு கொடுத்தோம் வட்டாட்சியர் சமாதானக் கூட்டம் நடத்தினார் அதில் தீர்வு காணப்படவில்லை. முப்பையூர் விளைநிலங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டன. இதனால் அவர்களுக்கு தண்ணீர் தேவை குறைந்துவிட்டது. எனவே முப்பையூர் கண்மாய் கலுங்கை 3 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் இதன் இதன் மூலம் வெட்டிவயல், வாயுலானேந்தலில் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் பயிர் அழுகி விணாகிவிடும் அவிவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்று கூறினார்.
Next Story