200 ஏக்கர் பரப்பளவில் தொழில்பேட்டை: அமைச்சர் தகவல்

200 ஏக்கர் பரப்பளவில் தொழில்பேட்டை:  அமைச்சர் தகவல்

திறந்து வைத்த அமைச்சர்

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கரிகிரி என்ற பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூபாய் 42 .56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 400 அடுக்குமாடி குடியிருப்புகளை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில், அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலூர் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

எனவே மீண்டும் காட்பாடி தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் வள்ளிமலை அருகே மகிமண்டலம் என்ற பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சேர்க்காடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது இது அடுத்த மாதம் துவக்கி வைக்கப்படும். மேலும் இந்த மருத்துவமனை படிப்படியாக 300 படுகைகள் வரை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கரிகிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள 400 குடியிருப்புகள்,

சுத்தமாகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story