200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம் - அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம் - அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

ஆக்கிரமிப்பு நிலம் 

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்ட வீடுகள் முளைத்துள்ளன. அரசியல் அழுத்தம் இருப்பதால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வருவாய் துறையின் கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம்மாவட்டத்தில் 1,100 ஏக்கர் அரசு நிலங்களும், 600 ஏக்கர் நீர்நிலை என, 1,700 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில் அரசியல் அழுத்தம்காரணமாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இதில் குறிப்பிடும்படியாக, வேகவதி ஆறு, மணிமங்கலம் நீர்ப்பிடிப்பு பகுதி, வரதராஜபுரம் அணைக்கட்டு, தாங்கல் ஏரி, படப்பை அருகேயுள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் சிக்கி, மீட்க முடியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

இதில், படப்பை அருகேயுள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, 20 ஆண்டுகளில் சிறுக, சிறுக அப்பகுதி அரசியல்வாதிகள் பிளாட் போட்டு விற்றதன் விளைவாக, இன்றைக்கு, 400க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர். மேய்க்கால் புறம்போக்கு நிலம் மட்டுமல்லாமல், 10 ஏக்கர் மயான புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story