வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த 2000 கிலோ சர்க்கரை பறிமுதல்

வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த 2000 கிலோ சர்க்கரை பறிமுதல்

கலப்பட வெள்ளம் பறிமுதல் 

பரமத்திவேலூர் அருகே வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பரமத்தி வேலுார் தாலுகா கபிலர்மலை,ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் சோதனை நடத்தினர். பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நடத்த சோதனையில் வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த 2,000 கிலோ சர்க்கரை மற்றும் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மூன்று ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் கரும்பாலை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமை பெற வேண்டும், கரும்பாலையில் பணிபுரிவர் மருத்துவச் சான்று பெற வேண்டும், சி.சி..,டிவி கேமரா பொருத்த வேண்டு.ம் பணிபுரிவோர் தன் சுத்தத்தை பேண வேண்டும்.

நாட்டு சக்கரை, வெல்லம் தயாரிக்கும் போது கட்டாயமாக அஸ்கா சக்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யக்கூடாது என எச்சரித்தனர். இதை மீறி செயல்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் இனி வருங்காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறினர்.

Tags

Next Story