2002 .. 2003 அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு

X
Komarapalayam King 24x7 |24 Aug 2025 6:56 PM ISTகுமாரபாளையத்தில் 2002 .. 2003ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையத்தில் 2002 .. 2003ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நாம் எத்தகைய பணிகள் செய்தாலும், ஒவ்வொருவர் வாழ்வில் பள்ளியில் பயின்ற காலம் யாராலும் மறக்க முடியாத நினைவுகள் ஆகும். இதனால்தான் ஒவ்வொரு பள்ளியில் முன்னாள் மாணவர்கள், சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002 .. 2003ம் ஆண்டு முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாணவியர் இறை வணக்கம் பாடினார்கள். இதில் மாணவி உமா மகேஸ்வரி .வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கல்வி கற்பித்த ஆசிரிய பெருமக்கள் தில்லைக்கரசி, பழனிச்சாமி, பன்னீர் செல்வம், சங்கர், வெற்றிவேல், வெங்கடாசலம், தில்லைக்கரசி, சேகர், மனோகரன், சுந்தரம்பாள், சிவராமன், தாமோதரன், பரிமளா, கண்ணன், சந்திரன், வசந்தி, மாலதி, ரவிச்சச்ந்திரன், உடற்கல்வி ஆசிரியர் முருகேசன், செல்வி, ராஜாமணி, ராணி, சுதந்திரதேவி, சாந்தா, ஈஸ்வரி, முருகேசன், கார்த்தி ஆகியோர் பங்கேற்றார்கள். இவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்கள் தாங்கள் பள்ளி பருவத்தில் நடந்த சுவையான அனுபவங்களை பற்றி கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார்கள், முன்னாள் மாணவர் ஜீவானந்தன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணாக்கர்கள் சங்கர்,மணிகண்டன், உமாமகேஸ்வரி, செல்வகுமாரி உள்ளிட்ட மாணாக்கர்கள் பலர் செய்திருந்தனர்.
Next Story
