20,021 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய முதலமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம்,பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story

