2021 தேர்தல் வாக்குறுதி படி பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் TN,PONDI இன்ஜினியரிங் அசோசியேசன் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை

குஜராத் மாநிலம் 2006 ஆம் ஆண்டு மற்றும் THE KARNATAKA PROFESSIONAL CIVIL ENGINEER ACT, 2024 பொறியாளர் கவுன்சிலை உருவாக்கிஉள்ளதை போல 2021 திமுகதேர்தல் அறிக்கை பக்கம் 65-ல் வரிசை எண் 471-இல்  அறிவித்தது போல தமிழகத்தில் கட்டடப் பொறியாளர் கவுன்சில்அமைத்து தர வேண்டும்அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களில் கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம்திருச்செங்கோடு நந்தவனத் தெருவில் உள்ள பொறியாளர் அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்செங்கோடுசிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் பொறியாளர் வி.என்.சிபாலாஜி தலைமை வகித்தார் கூட்டமைப்பின் மண்டலம் ஆறின் தலைவர் பொறியாளர் கண்ணன்செயற்குழுவின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார் கூட்டத்தில் திருச்செங்கோடு சிவில் இன்ஜினியர் அசோசியேசன் செயலாளர் தனபால் பொருளாளர் ராஜவேலு துணைத் தலைவர் தங்கவேல் செயற்குழு உறுப்பினர்கள் சிவா, ஜெயக்குமார், கோகுல், மாரியப்பன், வினோத்குமார், ரமேஷ் குமார், ஜேசுதாஸ், வாசுதேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துகட்டுமான பொறியாளர் சங்கங்களில்கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 97 கட்டடப் பொறியாளர் சங்கங்களை உள்ளடக்கியது. 97 சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டம் பெற்ற பொறியாளர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள்.இவர்களை ஒருங்கிணைக்கும் வகையில்2021சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் பக்கம் 65-ல் வரிசை எண் 471-இல் தாங்கள் அறிவித்துள்ளது போல தமிழகத்தில் கட்டடப் பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து இந்திய அரங்கில் தமிழகத்திற்கு உள்ள தனித்தன்மைக்கு பெருமை சேர்த்திடும் வகையில் நிறைவேற்றித் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.  முதல் முதலாக குஜராத் மாநிலம் 2006 ஆம் ஆண்டு மற்றும் THE KARNATAKA PROFESSIONAL CIVIL ENGINEER ACT, 2024 பொறியாளர் கவுன்சிலை உருவாக்கி செயல் வடிவம் கொடுத்து உள்ளனர்.அதுபோல தமிழகத்திலும் உருவாக்கி தர வேண்டும். பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறும், மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்தித் தரவேண்டும் பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு முறை பதிவு செய்தால் ஆயட்காலம் வரை செல்லத்தக்கதாகவும், மேலும் பதிவினை புதுப்பித்தல் அவசியமில்லை என்ற நடைமுறையை நடைமுறைப்படுத்தி தர வேண்டும் சுயசான்று (SELF-DECLARATION) அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில், பொறியாளர்கள் வரைபடம் தயார் செய்யவும், கையெழுத்து செய்யவும் நடைமுறையை மாற்றாமல் (G.O.No:133, Dt.18.07.2024)-ன்படி தொடர வேண்டுமாய் மேலும் பொறியாளர்களுக்கு OTP வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்களின் நகல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இமெயில் மூலம்அனுப்பிவைக்கப்பட்டது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்ஈஸ்வரனிடம் நாளை நேரில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.தீர்மானங்கள் குறித்து செய்தியாளரிடம் பேசிய பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 6ம் மண்டல தலைவர் கண்ணன் மற்றும் திருச்செங்கோடு சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் பாலாஜி ஆகியோர் கூறியதாவது குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ளது போல்கட்டிட பொறியாளர் கவுன்சில் தமிழ்நாட்டிலும் அமைத்து தர வேண்டும் டாக்டர்களுக்கு வக்கீல்களுக்கு உள்ளது போல் எங்களுக்கும் பயன் தரும் வகையில் இந்த கவுன்சில் அமைத்து தர வேண்டும் 2021 காண தேர்தல் அறிக்கையில் திமுக உறுப்பினர் போல் இன் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கும் என நம்புகிறோம். அரசு கட்டுமானபணிகள் நடக்கும்போதுஏதாவது தவறு நேர்ந்தால் பொறியாளர்கள் தான் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருப்பதால் எந்தப் பணி நடைபெறுகிறது என்பது குறித்து நாங்கள் உறுதி செய்து கொள்ள ஓடிபி எங்களுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம் மேலும் திருச்சங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எங்களுடைய நிலையை நன்கு உணர்ந்தவர் என்பதாலும் அவர் இன்று வெளியூர் சென்றிருப்பதால் நாளை அவரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
Next Story