2026 தேர்தலை எழுச்சியுடன் எதிர்கொள்ளவே உறுப்பினர் சேர்க்கை தீவிரம். கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்.
Karur King 24x7 |1 Sep 2024 1:17 PM GMT
2026 தேர்தலை எழுச்சியுடன் எதிர்கொள்ளவே உறுப்பினர் சேர்க்கை தீவிரம். கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்.
2026 தேர்தலை எழுச்சியுடன் எதிர்கொள்ளவே உறுப்பினர் சேர்க்கை தீவிரம். கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் அதிமுக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி, அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று கரூர் மாவட்டத்தில், கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆங்காங்கே நடைபெற்றது. கரூர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாவட்ட அவை தலைவர், நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை வழங்க, தயார் செய்யப்பட்ட அடையாள அட்டைகளை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார் எம் ஆர் விஜயபாஸ்கர். இதன் பிறகு அங்கு கூடியிருந்த கட்சியினர் இடையே பேசிய எம.ஆர். விஜயபாஸ்கர், தொண்டர்கள் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை தங்களது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே அவர்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், அதை எதிர்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் தேவையான மன ஆற்றலை பெற்றுள்ளதாக தெரிவித்தார். என்னைப் போலவே கட்சி நிர்வாகிகள் பலரும் பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். இதற்கெல்லாம் விடிவு காலமாக இன்னும் 18 அமாவாசை உள்ளது என்றும், 2026 தேர்தலை எழுச்சியுடன் எதிர்கொள்ளவே உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.
Next Story