2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |12 Nov 2024 11:35 AM GMT
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமி மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அளவிலான ஒன்றிய, நகர, தேர்வு கழக, பகுதி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நடைபெறவுள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வியூகம் அமைத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
Next Story