2026 சட்டமன்றதேர்தலில் விஜய் அவர்களை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது எங்களது முதல் நோக்கம்- அரவக்குறிச்சியில் சதீஷ்குமார் பேட்டி.
Karur King 24x7 |17 Nov 2024 4:14 PM GMT
2026 சட்டமன்றதேர்தலில் விஜய் அவர்களை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது எங்களது முதல் நோக்கம்- அரவக்குறிச்சியில் சதீஷ்குமார் பேட்டி.
2026 சட்டமன்றதேர்தலில் விஜய் அவர்களை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது எங்களது முதல் நோக்கம்- அரவக்குறிச்சியில் சதீஷ்குமார் பேட்டி. இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்றும், இன்றும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை முகாம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ் குமார் ஏற்பாட்டில், புதிய வாக்காளர் அடையாள அட்டை எவ்வாறு விண்ணப்பித்து பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்தனர். சதீஷ்குமார் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, வாக்காளர் முகாம் நடைபெற்று வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் தளபதி விஜய் அவர்களை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது தான் எங்களது முதல் நோக்கம். அதேபோல் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் ஆர்வம் எங்களை வியப்படைய வைத்துள்ளது. 2026 தேர்தலில் இளைஞர்களின் வாக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகமாக இருக்கும் எனக் கூறினார்.
Next Story