2026 சட்டமன்ற தேர்தலுக்குள்ளாவது அதிமுக ஒன்றினையுமா என்ற கேள்விக்கு அது அவர்கள் கட்சி விவகாரம் அதை அதிமுக பொதுச்செயலாளரிடமே கேட்க வேண்டும்.
வரும் 12ம்தேதி மதுரையில் பாஜ யாத்திரை தொடக்கம் : அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்பு தமிழகத்தில் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்கும் பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரை வரும் 12ம்தேதி மதுரையில் துவங்கிறது. இதில் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு தொடங்கிவைக்கிறார் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவுகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து பேசினார். மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் முன்னிலை வகித்தார். பிரிவுகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராகவன், மாநில துணை அமைப்பாளர் நாச்சியப்பன், மாநில பொருளாதா பிரிவு இணை அமைப்பாளர் தினேஷ், மாநில ஒய்வு பெற்ற அரசு ஊழியர் நல பிரிவு மாநில அமைப்பாளர் மாரியப்பன் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார். பின்னர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு இல்லை. அது அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளரிடம் தான் கேட்கவேண்டும். அவர்கள் கட்சி பிரச்சினையை அவர்கள் தீர்வு காண்பார்கள். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கும் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்று கொள்ளோம் என்று கூறினர். இப்போது டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர், டி.டி.வி. தினகரன் உள்பட சிலர் வெளியே வந்துவிட்டனர். எனவே அவர்களை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியது உண்மை. ஆனால் விஜய் தரப்பில் என்ன கூறினார்கள் என்பது தெரியவில்லை. அரசியலில் பக்தி வேறு, கொள்கை வேறு. தவெக கட்சி இதுவரை எந்த கொள்கையை முன் வைக்கிறது என்பது தெரியவில்லை. ஜெயந்திரர் சரஸ்வதியை தவெக தலைவர் விஜய்யின் பெற்றோர் சந்திருப்பது பக்திக்காக இருக்கலாம். அது நல்ல சந்திப்புதான். வரும் 12ந் தேதி மதுரையில் இருந்து பா.ஜனதாவின் யாத்திரை துவங்குகிறது. மாவட்டம் தோறும் மக்களை நேரில் சந்திக்கிறோம். இதன் தொடக்க விழாவில் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கிவைக்கிறார். இந்த யாத்திரையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால், பிரதமர் மோடி சுதேசி உள்நாட்டு பொருட்களை வாங்கும்படி கூறியுள்ளார். நம்முடைய நாட்டில் நல்ல பொருட்கள் உள்ளது. அதை மக்கள் பயன்படுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை முதலில் எதிர்த்தனர். தற்போது மக்கள் பழகிவிட்டனர். அதேபோல உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த பழகி கொள்வார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு அனைத்து மாநில நிதியமைச்சரின் ஆலோசனை பெற்றுதான் அமல்படுத்தி உள்ளோம். ரேஷன் கடைகளில் வழங்கும்படி பொருட்கள் அனைத்தும் மத்திய அரசுதான் வழங்கி வருகிறது. மாநில அரசுகள் வழங்குவது இல்லை. மக்களுக்கு நல்லது செய்வது மத்திய அரசு தான். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story




