தஞ்சை மாவட்டத்தில் 20,29,471 வாக்காளர்கள்

தஞ்சை மாவட்டத்தில் 20,29,471 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 20,29,471 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தஞ்சாவூரில், திங்கள்கிழமை காலை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.

இதில், திருவிடைமருதூர் தொகுதியில், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 218 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம், 2 லட்சத்து 61 ஆயிரத்து 588 பேர்,

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 737 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 736 பெண் வாக்காளர்கள், 14 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம், இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 487 பேர்,

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 703 பெண் வாக்காளர்கள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 571 பேர்,

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 397 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 791 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 205 பேர்,

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 728 பேர்,

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 843 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 839 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 685 பேர்,

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 304 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 701 பேர்,

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 266 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 230 பெண் வாக்காளர்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 506 பேர் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 லட்சத்து 827 பெண் வாக்காளர்கள், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 பேர் உள்ளனர். பின்னர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறுகையில், "நேற்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டணம் இன்றி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி 14வது தேசிய வாக்காளர் தினம் மாவட்ட தலைமையிடம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொண்டாடப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எழுதிக் கொண்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை மாணவர்களை கொண்டு பேரணி நடத்தப்பட உள்ளது" என்றார் ஆட்சியர்.

Tags

Next Story