2047-ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கத்தில் பிரமதர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ! மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்

நாளொன்று 34 கி.மீ நீளத்திற்கு தினசரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும்,11ஆண்டுகளில் 85 புதிய விமான நிலையங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும்,400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படுவதாகவும்,தமிழ்நாட்டில் 75 ரயில் நிலையங்கள் அமித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது
மத்திய பாஜக அரசு கடந்த 11 ஆண்டு *கால ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தலைசிறந்த நிர்வாகம், மாபெரும் வளர்ச்சியை நோக்கி பல்வேறு முன்னோடித் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது என்றும், மக்கள் நலனை கருதாத திமுக அரசுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் பேட்டி. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த, மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முருகன், அவரது குலதெய்வ கோயிலான, பரமத்தி வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, பாமா ருக்மணி சமேத அருள்மிகு நந்தகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை வீரன் சுவாமி கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார் இதன் பின்னர், பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். முன்னதாக பாஜக அலுவலகத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்....
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 11 ஆண்டுகள் நிறைவடைந்து 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது, 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கத்தில் பிரமதர் மோடி அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, 11 ஆண்டுகால ஆட்சி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும், பிரதமர் மோடி அவர்கள் மகளிர், இளைஞர், விவசாயிகள், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக செயலாற்றி வருகிறார், நமது நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது சிந்தூர் வெற்றி பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டி உள்ளதாகவும், துல்லியமான தாக்குதல் மூலம் 100 கி.மீ அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை கொண்டு சிந்தூரில் வெற்றி பெற்றுள்ளதாகவும், 11 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யபட்ட நிலையில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும்,
நாளொன்று 34 கி.மீ நீளத்திற்கு தினசரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், 11 ஆண்டுகளில் 85 புதிய விமான நிலையங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாகவும், 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் 75 ரயில் நிலையங்கள் அமித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
10.33 கோடி பேருகு உஜ்ஜவலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளது, 11 ஆண்டுகளில் 28 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து மத்திய தர வர்க்கத்தினராக வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகவும், 55 கோடி பேருந்து ஜந்தன் வங்கி கணக்கு தொடங்கப் பட்டுள்ளதாகவும், 46 கோடி பேர்டிஜிட்டல் பணவர்த்தனையை பயன்படுத்துவதாகவும், 15 கோடி பேர் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர்,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 272 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப் பட்டுள்ளது, 2047-ல் உலகத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும்.திமுக என்றாலே ஸ்டிக்கர் ஒட்டுவது, ஸ்மார்ட் சிட்டி, ஜல்ஜீவன் திட்டம், மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குவதை திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் திட்டம் போல் முன்னிலை படுத்துகிறது.முருக கடவுள் 2026-ல் திமுகவை ஓட ஒட விரட்டப் போகிறார்,தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பிறகு, இந்தி கூட்டணி பயத்தில் உள்ளது, தோல்வி பயத்தில் இந்தி கூட்டணி உள்ளது,
திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணி, அதிலிருந்து பலர் வெளியே வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள், ஊழல் பெருச்சாளி திமுக ஆட்சியை அகற்றப்படும்,
நாமக்கல் பேருந்து நிலையத்தை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காவே வெளியே கொண்டு சென்றுள்ளனர் , அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் கே பி சரவணன், எம் ராஜேஷ்குமார், நகர தலைவர் தினேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்துகொண்டனர்.
Next Story