கடலூர் மாவட்டத்தில் 20,651 யூனிட் ரத்தம் சேகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் 20,651 யூனிட் ரத்தம் சேகரிப்பு

இரத்த தானம் வழங்கியோருக்கு சான்றிதழ் 

கடலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் 20, 651 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 2022-23-ஆம் நிதியாண்டில் மொத்தம் 20, 651 யூனிட் ரத்தம் சேககரிக்கப்பட்டது. இதில் ரத்த வங்கிகள்மூலம் 15, 638 ஆண்கள், 37 பெண்களிடமிருந்து மொத்தம் 15, 675 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மேலும் 107 ரத்த தான முகாம்களின் வாயிலாக 4, 839 ஆண்கள், 137 பெண்களிடமிருந்து 4, 976 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த வங்கிகளில் ரத்த தான முகாம் அமைத்துக் கொடுத்த 83 முகாம் அமைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story