கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.68 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.68 லட்சம் வர்த்தகம்

வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 20.68 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 20.68 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, எள் 170 மூட்டை, மக்காச்சோளம் 70, வேர்க்கடலை 35, உளுந்து 8, கொள்ளு 8, கம்பு 5, ராகி 2, தேங்காய் பருப்பு 1 மூட்டை உட்பட 279 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை எள் 10,639 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,232, வேர்க்கடலை 7,418, உளுந்து 8,599, கொள்ளு 5,220, கம்பு 6,052, ராகி 3,349, தேங்காய் பருப்பு 5,651 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 20 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags

Next Story