கேரளாவில் 20வது முறையாக ஒரே கடையை உடைத்து தாக்கிய யானை:மக்கள் அச்சம்

கேரளாவில் 20வது முறையாக ஒரே கடையை உடைத்து தாக்கிய யானை:மக்கள் அச்சம்

கடையை உடைத்து அட்டகாசம் செய்யும் யானை

கேரளாவில் நள்ளிரவில் ரேஷன் கடையை உடைத்து பொருட்களை எடுத்துச் சென்ற காட்டு யானை, 20வது முறையாக ஒரே கடையை உடைத்து தாக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அரிக்கொம்பன், படையப்பா, சக்க கொம்பன் என்ற பெயர் கொண்ட காட்டு யானைகள் பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மூணாறு குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களை காட்டு யானை ஒன்று எடுத்துச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதே கடையில் கடந்த சில ஆண்டுகளாக அரிக்கொம்பன், படையப்பா போன்ற காட்டு யானைகள் இந்த கடையின் கதவை 19முறை உடைத்து பொருட்களை எடுத்து சென்ற நிலையில் தற்போது 20வது முறையாக புதிதாக வந்துள்ள காட்டு யானையும்,

இந்த கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தற்போது பதிவாகி அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story