எடப்பாடி அருகே 21 அடி உயர வேல்முருகன் முழு உருவ சிலை கோவில் கும்பாபிஷேகம்.

எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே 21 அடி உயர ஸ்ரீ வேல்முருகன் முழு உருவ சிலை,கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, இதில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆலச்சம்பாளயம், காட்டூர், மலங்காடு மணியகாரன் காட்டூர், பகுதியில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீவலம்புரி விநாயகர்,ஸ்ரீ அரசுவேம்பு, ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீபாலமரத்து முனியப்பன், மற்றும் 21 அடி உயர ஸ்ரீ வேல்முகன் முழு உருவ சிலை திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க யாகசாலையிலிருந்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி ஐந்து கோவில் கோபுர கலசத்திற்கும் புனித தீர்த்தத்தம் ஊற்றி ஓம்சக்தி, அரஹரா, அரஹா, என முழக்கமிட்டபடி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாதாரணையை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது பின்னர் ஸ்ரீவலம்புரி விநாயகர்,ஸ்ரீ அரசுவேம்பு, ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீபாலமரத்து முனியப்பன், மற்றும் 21 அடி உயர ஸ்ரீ வேல்முகன் முழு உருவ சிலை சுவாமிகளுக்கு ஆலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000யிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை சரிசித்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story