பளுகல் அருகே 21 கிலோ குட்கா பறிமுதல்
தொடர் புகாரை அடுத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்
குமரி மாவட்டத்தில் பளுகல், ராமவர்மன் சிறை பகுதியில் போதை பொருள் அதிகமாக விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு புகார் வந்தது. இந்த நிலையில் தனிப்படை உதவி ஆய்வாளர் பென்சாம் மற்றும் தலைமை காவலர் சிபு மற்றும் சுரேஷ் தலைமையில் போலீசார் பளுகல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த கணேஷ், கூள் என 21 கிலோ போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.இதை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் போதை பொருள் விற்பனை செய்ததாக ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரை கைது செய்து பளுகல் காவல் நிலையம் கொண்டு சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story