பரமத்தி வேலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.21 லட்சம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே உள்ள செக் போஸ்டில் நேற்று காலை கேரளாவில் இருந்து நாமக்கல் செல்ல வந்த நான்கு முட்டை லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 110- ஐ பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதில் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டியை சேர்ந்த சின்னராசு (47) என்பவர் ஓட்டிவந்த முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 690,
காரைக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்து 160, ராசிபுரத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் ஓட்டி வந்த முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 லட்சத்து 54 ஆயிரத்து 260, அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் ஓட்டி வந்த முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 110 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.