நாகர்கோவில் அருகே இளங்ககடையில் டாஸ்மாக் கடை முற்றுகை 21 பேர் கைது

நாகர்கோவில் அருகே இளங்ககடையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளங்ககடையில் தேவாலயம், பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனை நிரந்தரமாக மூட அப்பகுதியினர் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயலாளர் பீஜ்ரூல் ஹபீஸ் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு நேற்று மாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஜீப் ரகுமான்,அமீர்கான், மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், கோட்டார் கிளைச் செயலாளர் நியாஸ், காங்கிரஸ கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டி ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்
