2.1/2 பவுன்செயின் திருடிய பிரபல திருடன் கைது

2.1/2 பவுன்செயின் திருடிய பிரபல திருடன் கைது
X
வேடசந்தூர் அருகே 2.1/2 பவுன்செயின் திருடிய 35-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ள பிரபல திருடன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுள்ளெறும்பு நால்ரோட்டை சேர்ந்த பாலமுருகன்(45) இவர் கடந்த 4-ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கி எழுந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2.1/2 பவுன் செயின் காணாமல் போயிருந்து தெரிய வந்தது. இது வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ரெட்டியார்சத்திரம் கதிரியன்குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் ராஜசேகர் திருடுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதும், பல்வேறு மாவட்டங்களில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story