திருச்சி மாவட்டத் தோ்தல் பணியில் 2,132 போலீஸாா்

திருச்சி மாவட்டத் தோ்தல் பணியில் 2,132 போலீஸாா்

எஸ்பி வருண்குமார்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணியில் 2,132 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.

மக்களவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக ஒரு காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காப்பாளா்கள், 8 காவல் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 36 காவல் ஆய்வாளா்கள், 263 காவல் உதவி ஆய்வாளா்கள், 1,424 காவலா்கள், 383 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 2,118 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு, அங்கு ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளா், ஒரு காவல் ஆய்வாளா், 4 உதவி ஆய்வாளா்கள், 8 காவலா்கள் பணியில் உள்ளனா். ஆக மொத்தம் 2,132 போலீஸாா் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், விருப்பமுள்ள காவலா் அல்லாத தேசிய மாணவா் படை, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், காவலா்களும் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்தாா்.

Tags

Next Story